2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணமடுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், ஆணமடுவ, கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை புத்தளம் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆணமடுவ, விகாரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எச்.எம்.ஆரியரத்ன (வயது 53) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற இவர் காணாமல் போயிருந்த நிலையிலேயே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி சடலத்துக்குரியவரது மரணம் மர்மமானதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட பொலிஸார் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X