2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கை பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சிநிலை காரணமாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள் பெரும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றனர்.

குளங்கள், நீர்நிலைகள் மற்றும் கிணறுகளிலுள்ள நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து செல்வதினால் மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளாக சோளம், வெங்காயம், மிளகாய், பாகல் மற்றும் பூசனி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதேவேளை சிறுபோக நெல் வேளாண்மையும் ஆங்காங்கே நீர் இன்மையால் மடிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X