2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாத்தாண்டியாவில் இரு சீமெந்து விற்பனை நிலையங்கள் முற்றுகை

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

நாத்தாண்டி நகரில் சீமெந்து விற்பனை செய்யும் இரு வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்ட புத்தளம் மாவட்ட செயலக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், சீமெந்தை பதுக்கி வைத்திருந்தமை, அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்தமை ஆகிய  குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கையின்போது 32 சீமெந்துப் பக்கற்றுக்களையும்  நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் முற்றுகை மேற்கொண்ட வேளையில்  ஒரு வர்த்தக நிலையத்தில் சீமெந்து பக்கற்றுக்கள் எதுவும் இல்லாதிருந்த அதேவேளை, அவ்வர்த்தக நிலைய உரிமையாளரின் வீட்டில் சீமெந்து பக்கற்றுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அத்துடன், 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ஒரு பக்கற் சீமெந்தை 790 ரூபாவுக்கு குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் விற்பனை செய்துள்ளார்.  

மற்றைய வர்த்தக நிலையத்தில் 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய ஒரு பக்கற் சீமெந்தை 790 ரூபாவுக்கு கடை உரிமையாளர் விற்பனை செய்துள்ளார்.  

இந்த இரு வர்த்தகர்களுக்கும் எதிராக மாராவில நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X