Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
கல்பிட்டி கடற்கரையிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆழ்கடலில் பெற்றோலியவளம் அகழும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கேன்ஸ் லங்கா நிறுவனத்தின் வதிவிட முகாமையாளர் டெரன்ஸ் சுந்தரம் தெரிவித்தார். கல்பிட்டி கடலில் பெற்றோலியவளம் தேடுவதற்கான நடவடிக்கையினை கேன்ஸ் லங்கா எனும் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மீனவர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நடவடிக்கைக்காக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட கப்பல் ஒன்றே பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இதனால் சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.
800 மீற்றர் முதல் 1400 மீற்றர் வரையிலான ஆழ்கடலில் நான்கு மாதங்கள் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த டெரன்ஸ் சுந்தரம், இந்நடவடிக்கையில் ஈடுபடும் நவீன கப்பலுக்கு கடற்படையினரின் படகுகள் சில பாதுகாப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கப்பலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையானவற்றை கொழும்பிலிருந்து வரும் கப்பல் ஒன்றும் விநியோகிக்கும். இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ள கப்பலினால் மீனவர்களின் கடற்றொழிலுக்கு எதுவிதப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அக்கப்பலுக்கு அருகில் செல்லாது அக்கப்பலைக் கவனிக்காது தங்கள் வழமையான தொழிலில் ஈடுபட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago