2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் தலைதுண்டிக்கப்பட்டு பலி

Super User   / 2011 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தில்  தலைவைத்து படுத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலினால் தலை துண்டிக்கப்பட்டு பலியாகியுள்ளார். இது தற்கொலையாக இருக்கலாம் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழந்தைகளின் தந்தையான 33 வயதுடைய ஒரு நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிலாபம், மைக்குளம் பிரதேசத்திலுள்ள ரயில் பாதையில் தலை வைத்து அவர் படுத்திருந்த வேளை, கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி வந்த ரயில் இவர் மீது ஏறியது.

இறந்த நபரின் சடலம் பிரேத பரிசேதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X