Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் பொலிஸ் பிரிவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதற்கான கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகரும் புத்தளம் பெரிய பள்ளிவாசலும் இணைந்து இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
புத்தளம் பொலிஸ் தொகுதியிலுள்ள நவகத்தேகம, கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுகளில் மர்ம மனிதர்கள் நடமாடுவதாக முதலில் முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் கரம்பை, இஸ்மாயில்புரம் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. விசாரணை மேற்கொண்டபோது வெறும் வதந்திகளாகவே உள்ளதாக புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ.டீ.சுகதபால குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மண் வெட்டுவோரும் சட்டவிரோதமாக சாராயம் வடிப்போருமே இவ்வாறான வதந்திகளுக்கு பின்னால் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தளத்தில் சில பகுதிகளில் மர்ம மனிதர்கள் நடமாடுவதாக தகவல் கிடைத்த நிலையில் நாம் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு உறுதிப்படுத்தும்படியாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படவில்லையென புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார். மர்ம மனிதர்கள் நடமாடுகின்றனர் என்ற வதந்தியினால் புத்தளம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பொலிஸ் தொகுதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ.டீ.சுகதபால, புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகர, புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் சித்திவிநாயகர் கோயில் பிரதம குருக்கள் சுந்தராம, நகரசபை உறுப்பினர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
meenavan Wednesday, 17 August 2011 09:10 PM
மர்ம மனிதர்கள் இப்போது நாடு முழுவதும் பரவி விட்டார்கள் போலும்? ஆனால், போலீஸ் அதிகாரிகளின் கருத்து மர்ம மனிதர்களது பின்னணியில் உள்ளவர்கள் மரம் கடத்துவோரும்,கொல்லைக்காரர்களுமே? இதை யாரிடம் முறையிட? மக்களால் விரட்டப்படும் மர்மனிதர்களும் காவலரனுக்குள் தான் அபயம் தேடுகின்றனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago