Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி, எம்.பரீட்)
மன்னார் பிரதேசத்தில் இன்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் அடம்பன் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த கின்னியா பிரதேசத்தினைச் சேர்ந்த 14 பணியாளர்கள் இன்று மாலை முருங்கன் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது முருங்கன் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் வைத்து அவர்கள் பயணம் செய்த வாகனம் டிப்பர் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியது.
இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 8 பேர் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.அவர்களில் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையிலும், முருங்கன் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் கின்னியா குருஞ்சன் கேனி கிராமத்தினைச் சேர்ந்த எம்.எஸ்.சப்ராஸ் (வயது-17) மற்றும் கின்னியா கட்டையாறு கிராமத்தினைச்சேர்ந்த எம்.மகிடுத்(வயது-52) என மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஆசத் தெரிவித்தார் .விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago