Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
வீட்டின் வெளியிலிருந்த தண்ணீர் பாத்திரத்தினை எடுப்பதற்காக வீட்டின் உள்ளேயிருந்து வெளியில் கையை நீட்டிய போது ஏதோவொன்று தனது கையினை இழுப்பதாக உணர்ந்ததாக தான் உணர்ந்ததாகவும், எட்டிப்பார்த்த போது கறுப்பு நிறத்திலான உடையுடன் தடித்த உருவமொன்று எனது கையினை பிடித்திருந்ததினையும் அந்நபரின் கையில் இரும்பிலான கவசம் அணிந்திருந்ததையும் கண்டதாக கற்பிட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை மர்ம மனிதனின் தாக்குதலினால் காயப்பட்டதாக கூறப்படும் முசத்திக்கா அஸ்கர் கூறினார்.
'நான் குடும்பத்துடன் சேர்ந்து நோன்பினை திறந்து விட்டு தனது கணவர் பிள்ளைகளுடன் வீட்டுக்கு வெளியில் நின்ற போது தான் வீட்டின் பின்பகுதியிலிருந்த தண்ணீர் பாத்திரத்தினை எடுக்க முயன்றபோது இச்சம்பவம் ஏற்பட்டது.
அப்போது, நான் எனது கையினை கூச்சலிட்டப்படி எனது கையை உள்ளே இழுத்தபோது, அவனுடைய விரல்களிலிருந்த பளபளப்பான நகம் போன்ற ஆயுதம் எனது கையினை காயத்துக்குள்ளாக்கியது. அதன் பின் நான் மயக்கமடைந்தேன்' எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, 4 பிள்ளைகளின் தாயான ஏ.பி.எப். சிபா எனும் பெண் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து கூறுகையில், கடந்த திங்கட்கிழமை மாலை 06.10க்கு நோன்பு திறப்பதற்குரிய வேலைகளினை செய்துக்கொண்டிருந்த போது வீட்டின் அறைக்குள் இருந்து ஒரு உருவம்; தன்னை பிடிக்க வந்ததாகவும் தான் கூச்சலிட்டப்படி வீட்டிற்கு வெளியில் ஓடியதாகவும் கூறினார்.
அப்போது அந்த உருவம் வீட்டின் பின் புறமாகவுள்ள தோட்டத்திற்குள் பாய்ந்து சென்றது எனவும் தான் அப்போது இவ் விடயம் தொடர்பாக கூறிய போது பலர் நம்பாத போதிலும் இப்போது பெரும்பாலானவர்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதமாக இருப்பதினால் இரவு நேர விசேட தொழுகையான தராவீஹ் தொழுகைக்கும் பெண்களின் வரவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும், நிம்மதியான உறக்கமில்லையெனவும் மற்றுமொரு வயோதிபர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago