Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் கிறீஸ் மனிதன் என பொதுமக்கள் சந்தேகித்த நபர் ஒருவரை அவர்கள் பிடிக்க முயன்றபோது, பொலிஸாரால் பொதுமக்கள் தடுக்கப்பட்டதையடுத்து பதற்றநிலை ஆரம்பமாகியது.
புத்தளத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, சந்தேக நபரை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அந்நபர் வீடொன்றுக்குள் புகுந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது பொதுமக்கள் அவ்வீட்டிற்குள் செல்வதை மோட்டார் சைக்கிளொன்றில் அங்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் தடுத்துள்ளனர். அதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்துடன் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கினர். மற்றொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
அத்துடன் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் 5 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சிலர் தெரிவிக்கின்றனர்.
இப்பதற்றநிலை பின்னர் புத்தளம் நகருக்கும் பரவியது. புத்தளம் நகரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பின்னர், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு புத்தளம் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
AJ Monday, 22 August 2011 05:50 AM
வாழ்க மஹிந்த சிந்தனைய
Reply : 0 0
jothy Monday, 22 August 2011 08:16 AM
போலிஸ் காவல் பொது மக்களுக்கா இல்லை கிரீஸ் மனிதனுக்கா?
Reply : 0 0
sakeena. Monday, 22 August 2011 08:19 AM
யுத்த பீதியில் கிடந்த காலம் போய்,இப்ப கிரீஸ் பூதமாம்.என்ன சார் நாடு இது. அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Reply : 0 0
abdul gafoor Monday, 22 August 2011 09:00 AM
இன்னும் சில வெங்காயங்கள் இவற்றை மூடிமறக்கத்தான் முயல்கின்றன. பாவம் மக்கள் நோன்பின் கடைமையை சரியாகச் செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஊனமுற்ற அரசியல்வாதிகளுக்கு நல்லாதான் இருக்குது.
Reply : 0 0
dilshad muhammed Monday, 22 August 2011 09:00 AM
கிரீஸ் மனிதன் விவகாரத்தை அரசாங்கம் வேண்டுமென்றே மறைக்கப்பதன் விளைவு தான் இது, புத்தளத்தை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள் எங்கே? புனித ரமலானை நல்ல முறையில் பயன்படுத்த வலி செய்து கொடுக்காத குற்றத்திற்கு நீங்கள் அனைவரும் ஆளாவீர்கள்.
Reply : 0 0
banu Monday, 22 August 2011 02:19 PM
கடும் கொடுமை
Reply : 0 0
ÁÁ®¾°©Í Monday, 22 August 2011 02:33 PM
மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதை காவலர்கள் ஏன் தடுக்கிறார்கள்? துப்பாக்கி சூடு நடத்தி மர்மமனிதர்களை தப்புவிக்க முயல்வதன் காரணம் என்ன?
Reply : 0 0
najla Monday, 22 August 2011 07:00 PM
நம்பாதீர்கள் அரசியல்வாதிகளின் பேச்சை
Reply : 0 0
hakeem Monday, 22 August 2011 08:23 PM
அப்பா கிரீஸ் மனிதன் லீவுல போகலையா? புத்தளத்துக்கா போய் இருக்கான்.
Reply : 0 0
xlntgson Monday, 22 August 2011 09:49 PM
ஒரு பொலீஸ் காவல் நிலையம் இராணுவம் வசம்? இது தொடர்ந்தால் இராணுவச் சட்டம் நீக்கப்படும் அறிகுறி தெரியவில்லை!
Reply : 0 0
nawas mohammed Monday, 22 August 2011 10:24 PM
இந்த ரமலான் மாதத்தில் இப்படி ஒரு சோதனை. முஸ்லிம்களே மறந்து விடாமல் தங்களது இறைவனிடம் இது பற்றி முறைப்படுங்கள். நிச்சயமாக அவன் கைவிட மாட்டான். மர்ம மனிதர்கள் வெறும் அரசாங்கத்தின் வேலைதான். இவர்களுக்கும் வல்ல அல்லா அளிவைக்கொடுப்பான்.ஒவ்வொரு தொழுகைக்குப்பின் க்நூத் ஓதி இறைவனிடம் இறைஞ்சுங்கள் , யா அல்லா மர்ம மனிதர்களிடம் இருந்து மக்களை காப்பாயாக ! ஆமீன் .
Reply : 0 0
wafa master Monday, 22 August 2011 11:03 PM
நீதி செத்துவிட்டது உலகின் முடிவு நெருங்கி விட்டது என்ற அடையாளம். ஆச்சியால் மக்களுக்கு மீச்சி இல்லை.
Reply : 0 0
Nirmalalraj Monday, 22 August 2011 11:21 PM
வபா மாஸ்டர், ஆட்சியால் மீட்சி இல்லை என்று சொல்ல வந்தீர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago