Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் 65 பேர் நேற்று நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்கான பரீட்சை நிலையமாக முன்னேகுளம சிங்கள மகாவித்தியாலயம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு தமிழ்மொழிபேசும் உத்தியோகஸ்தர்கள் எவருமே நியமிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளானதாக அம்மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நிக்கவரெட்டிய கல்வி வலயத்திலுள்ள அபுக்காகம முஸ்லிம் வித்தியாலயம், மற்றும் கல்பினம முஸ்லிம் வித்தியாலயம் ஆகியற்றைச் சேர்ந்த மாணவர்களே இந்த அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.
முன்னேகுளம சிங்கள மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் தமிழ்மொழிபேசும் உத்தியோகஸ்தர்கள் எவரும் இல்லாததால் இம்மாணவர்கள் 65 பேரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியதாக மாணவர்களும் அவர்களி;ன் பெற்றோர்களும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜே.ஜி.என். திலகரட்னவிடம் கேட்டபோது, தமிழ்மொழி தெரிந்த உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படாதமையினால் அம்மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக தான் விசாரணைக்கு உத்தரவிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
meenavan Monday, 22 August 2011 11:55 AM
தமிழ் மொழி தெரியாத உத்தியோகத்தர்களை நியமிக்காமைக்கு காரணம்,கல்வியமைச்சா? மாகான கல்வியமைச்சா? எது எப்படி இருந்தாலும் பிஞ்சு உள்ளங்களில்,ஏற்படும் தாக்கங்கள் சுபீட்சமான இலங்கையை கட்டி எழுப்புவதற்கு சாதகமாக அமையாது என்பது மட்டும் உறுதி.
Reply : 0 0
pathmadeva Tuesday, 23 August 2011 03:39 AM
இந்த தமிழ் உத்தியோகத்தர் நியமிக்கப்படாத பிரச்சினை பரீட்சைகள் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே தமிழ் மட்டுமே தெரிந்தவர்களை அல்லலுக்கு உட்படுத்தி வருகிறது! ஊடகங்களுக்கு இப்போதுதான் (இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகு) “கண் தெரிகிறது“!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago