2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் பஸில்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பகல் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.கிங்ஸ்லி பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது புத்தளம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை, புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் இடம்பெற்ற மர்ம மனிதர் விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X