2025 மே 26, திங்கட்கிழமை

எண்ணெய் பூசிக்கொண்டு உள்ளாடையுடன் நின்ற சந்தேகநபர் கற்பிட்டியில் கைது

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் பொதுமக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளாடையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய சந்தேக நபர் ஒருவரை பிடித்துள்ள பிரதேசவாசிகள் அந்நபரை, கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த நபர், தனது உடலில் எண்ணெய் பூசியிருந்ததாகவும் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதில் பிரதேசவாசிகள் சிரமத்தை எதிர்க்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 10,400 ரூபா பணமும், கையடக்கத் தொலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார், உரிய விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • Nawabdeen Wednesday, 24 August 2011 07:06 AM

    express news.thanks.because i am same place but i am in qatar,i call it real news.

    Reply : 0       0

    faroos Wednesday, 24 August 2011 02:51 PM

    சார் இது கள்ளன்யா! அது மர்ம மனிதன் எதுவா?
    நீங்க பிடித்த விபரம் எதுவும் இல்லாத மனிதன் அவன்தான் உன்மையான மர்ம மனிதன்.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 24 August 2011 09:20 PM

    கிரீஸ் விலையோ எண்ணெய் பூசிக்கொள்ள, அல்லது கிழமைக்கு ஒரு நாள் பூசிக்குளிக்கும் வழமை கொண்டவரா? நல்லெண்ணெய் என்றாலே நாற்றம் என்பவரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X