Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மும்தாஜ் ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகரில் இன்று புதன்கிழமை முழு நாள் கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் புத்தளம் நகரிலுள்ள அனைத்து கடைகள், வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நகரில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினையடுத்து இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த கடையடைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கடையடைப்புக்கான வேண்டுகோளை புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட உலமா சபை மற்றும் புத்தளம் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து விடுத்திருந்தன.
'இந்த சம்பவத்துக்கு மக்களின் அனுதாபத்தை தெரிவிக்கும் முகமாகவும் சகோதர சமூகத்தின் மன உணர்வுகளை மதித்தும் இந்த முழு நாளும் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்' என கூட்டாக விடுக்கப்பட்ட வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகரின் பல இடங்களிலும், கடைகள், வீடுகள், வாகனங்கள், முச்சக்கர வண்டிகளிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த நவரத்ன பண்டார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்ற பொலிஸ் - பொதுமக்கள் மோதலையடுத்து இடம்பெற்ற தாக்குதலின் போது உயிரிழந்தவராவார்.
இவரின் இறுதி கிரியைகள் இன்று மாலை அவரது சொந்த ஊரான நொச்சியாகமவில் இடம்பெறவுள்ளது.
Dilshad Muahammed Thursday, 25 August 2011 06:49 AM
இனி மேல் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாதிருக்க அரசும் பொது மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்த போலீஸ் அதிகாரிக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதிகாரத்தை கையில் எடுக்கும் உரிமை பொதுமக்களுக்கு ஒரு போதும் இல்லை என்பதையும், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசும் பாதுகாப்பு உத்துயோகத்தர்களும் உதாசீனம் செய்யகூடாது என்பதை இரு தரப்பும் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago