2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

மர்ம மனிதர்கள் விவகாரம் தொடர்பில் புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நவரத்ன பண்டாரவின் குடும்பத்தினரின்  நலன் கருதி  நிதியுதவி வழங்க புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குட்பட்ட 31 மஹல்லாக்களிலிருந்து நிதி  சேகரிக்கப்பதற்கும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான நிதி சேகரித்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்தினருக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கும்  புத்தளம் பெரியபள்ளிவாசலில்  நடைபெற்ற கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது நிதியுதவியளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X