Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு புத்தளம் முஸ்லிம் சமூகத்தினர் உதவவுள்ளதாக புத்தளம் மாவட்ட ஐம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அப்துல்லா மஹ்மூத் அலிம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
குறித்த சம்பத்தின் போது சேதமாக்கப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு மாற்றீடாக புதிய மோட்டார் சைக்கிள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இச்சம்பவத்தின் போது துப்பாக்கி சுட்டில் காயமடைந்த ஐந்து பொதுமக்களும் இழப்பீடு வழங்க நடடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த உதவும் பணியினை புத்தளம் மாவட்ட ஐம்இய்யதுல் உலமா சபை, புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் வர்த்தக சங்கம் ஆகியன பொதுமக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக அப்துல்லா மஹ்மூத் அலிம் குறிப்பிட்டார்.
மர்ம மனிதன விவகாரம் தொடர்பில் புத்தளத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் இடம்பெற்றது.
இதன்போது புத்தளம் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 23 வயதான நவரத்ன பண்டார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் கொல்லப்பட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடங்களாக 6 பொதுமக்கள் காயமடைந்தனர்.
Mohamed Sunday, 28 August 2011 04:02 AM
நல்லதொரு முன்மாதிரியாக அமையட்டும்.
Reply : 0 0
meenavan Sunday, 28 August 2011 07:08 AM
மனிதாபிமானம் இலங்கையில் இன்னும் உயீரோடிருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டு. அதே போன்று காயமடைந்தவர்களுக்கும் உதவிகள் கிடைக்கட்டும்.
Reply : 0 0
Ruzy Sunday, 28 August 2011 08:19 AM
வரவேற்க தக்க விடயம். இனியும் இது போல் நடைபெறாது இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
Reply : 0 0
Anbalan Sunday, 28 August 2011 01:19 PM
புத்தளத்தில் இப்படி. யாழ் மண்ணின் என்ன நடக்கின்றது? அதை பிரசுரிக்க மாட்டீர்களா? யாழ் மக்கள் எப்பவும் சட்டதிட்டங்களுக்கு அப்பால்பட்டவர்களா?
Reply : 0 0
sathya Monday, 29 August 2011 04:05 PM
முஸ்லிம்கள் தமது பொறுப்புணர்வை வெளிக்காட்டியுள்ளார்கள், அதேபோல் அரசும் இந்த நிகழ்வில் தனது பொறுப்புணர்வை வெளிக்காட்டுமா??!! புத்தளம் பொலிஸ்,இராணுவம் தனது பொருப்புணர்வை வெளிக்காட்டுமா???? மானசீக ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு யார் இழப்பீடு வழங்குவது???!!
”குழப்பத்தை ஏற்படுத்துவது கொலையை விட பாரதூரமானது” -அல்-குர்ஆன்-
Reply : 0 0
Rifai Monday, 29 August 2011 06:56 PM
தொடர்து பதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலை யார் .......?
Reply : 0 0
Rifai Monday, 29 August 2011 06:58 PM
அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago