2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுமாறு  பொதுமக்களிடம், புத்தளம் பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுமக்களுக்கு  பின்வரும் வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது. அவையாவன,  

எந்த சந்தர்ப்பத்திலும் வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம்.

ரமழான் இறுதிப் பத்தின் அமல்களை பெண்கள் வீட்டிலிருந்து நிறைவேற்றுங்கள். ஆண்கள்    அமைதியாகப் பள்ளிவாசலுக்கு வந்து நிறைவேற்றுங்கள்.

பாதையோரங்களில் கூடி நின்று கதைத்துக்கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து வீட்டில் இருப்பதன் மூலம் வீட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.  

மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் ஹெல்மட் அணிந்து லைசன்ஸ், இன்சூரன்ஸ், ட்ரைவிங் லைசன்ஸ் என்பவற்றை உடன் வைத்திருக்கவும்.

எதிர்வரும் நோன்புப் பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு உங்களாலான எல்லா முயற்சிகளையும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளுங்கள். பட்டாசு கொளுத்துவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இரவு நேரங்களில் பெண்கள் ஆண் துணையின்றி கடைத்தெருவிற்குச் செல்வதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பெருநாள் ரேஸ் ஏற்பாடு செய்வோர் அவற்றை இம்முறை தவிர்ப்பது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமானது என்பது அனைவரினதும் ஏகோபித்த கருத்தாகும்.  

இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்துக்கு உதவுவதற்கான நிதியத்துக்கு உங்களாலான அதிகூடிய பங்களிப்பை வழங்குங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X