2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புத்தளத்தில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எப்.ஜெஸீரா, இர்சாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தையடுத்து நகரில் மீண்டும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பன  கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

புத்தளம் நகரில் இருந்து கொழும்பு வீதி ஊடாக செல்லும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் புத்தளம் நகர மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண் முன் நிறுத்தப்பட்டு தலைக்கவசம், வாகன அனுமதிப் பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம், சமிக்ஞை விளக்குகள் என்பன முறையாகவுள்ளதாகவும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, முச்சக்கர வண்டிகளில் மூவருக்கு மேலதிகமாக நபர்கள் காணப்படும் போது அதற்கெதிராக சட்ட நடவடிக்கையெடுப்பதிலும் பொலிஸார் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். புத்தளத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் செயற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாளை மறுதினம் புதன்கிழமை முஸ்லிம்களது நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், கற்பிட்டி, மதுரங்குளி, கரைத்தீவு, எலுவன்குளம் பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொருள் கொள்வனவுக்காக வருகை தந்தவண்ணமுள்னனர்.

கடந்த சில தினங்களாக புத்தளம் நகரின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மாலை வேளைக்கு பின்னர் இழுத்து மூடப்பட்டன. தற்போது நகரம் வழமைக்கு திரும்பி கொண்டிருக்கின்ற போதும் பொதுமக்களிடத்தில் ஒரு வகையான அச்சநிலை காணப்படுகின்றது.

நகரின் முக்கிய சந்திகளில் இராணுவத்தினரின் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X