Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஓகஸ்ட் 29 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் செப்டெம்பர் 13 ஆம்திகதி நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளது.
நீதிபதிகள் டபிள்யூ.எல். ரஞ்சித் சில்வா, எச்.நளின், ஜே.பெரேரா, ஆகியோரைக் கொண்ட குழாம் இத்தீர்ப்பை அளித்தது.
ஏற்கெனவே ஆகஸ்ட் 5 ஆம் திகதி நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவை தலைவராகக் கொண்ட நீதிபதிகள் குழாம் இவ்வாறான மனுவை நிராகரித்திருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஸ்ரீ போதிராஜ மன்றம், ஜாதிக சங்க சம்மேளனம், தர்மவிஜய மன்றத்தின் தலைவர் ஒல்கொட் குணசேகர, வண பண்டிருப்புவே வினீதா தேரர், மிருக நலன்புர நம்பிக்கை நிதிய தலைவர் ஐராங்கனி டி சில்வா, அதன் பொருளாளர் விசாகா திலகரட்ன, இலங்கை மிருக பாதுகாப்புச் சங்கத்தின் உபதலைவர் லோரின் மார்கரெட் பார்தோலோமஸ், இலங்கை மிருக பாதுகாப்பு சங்கததின் செயலளார் ஷிராமினி தேசிறி ரட்னாயக்க, 'சத்வ மித்ர' தலைவர் சாகரிகா ராஜகருணாநாயக்க மற்றும் மேலும் ஐவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இக்கோவிலில் மிருக பலி கொடுப்பதற்கு வருடாந்த அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரமோ அல்லது வேறு வகையான அனுமதியோ வழங்கக்கூடாது என சிலாபம் நகர சபைக்கும் அதன் தலைவருக்கும் உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
பொலிஸ் மா அதிபர், புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர், சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிலாபம் பொலிஸ் பொறுப்பதிகாரி, சிலாபம் நகர சபை, அதன் தலைவர், ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்கள் எம்.கனகரட்னம், காளிமுத்து சிவபாக்கிய சுந்தரம், மஹேந்திர சாமி, அகில இலங்கை இந்து காங்கிரஸ், தலைவர் சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் சி.ஆர்.டி சில்வா, சுரேன் டி சில்வா, ஆர்.ஜே.டி சில்வா, டுலான் வீரவர்தன ஆகியோர் ஆஜராகினர். ஆலயத்தின் தர்மகர்த்தா சிவபாக்கிய சுந்தரம் சார்பில் மொஹான் பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் எஸ்.சிவராசா, ஏ.ஆர்.சுரேந்திரன், வி.புவிதரன் ஆகியோரும் தர்மகர்த்தா மஹேந்திர சாமியின் சார்பில் ஸ்ரீநாத் பெரேரா, நெவில் டி சில்வா, என். காண்டீபன் ஆகியோர் ஆஜராகினர். ஏனைய பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிம்பா திலகவர்தன ஆஜரானார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
meenavan Tuesday, 30 August 2011 12:02 PM
சமய கிரியைகளில் மிருக பலி கொடுப்பதற்கு தடை கோரும் பிரகிருதிகள், அதிகார வெறியினால் அப்பாவி மனித உயிர்களை பலி எடுப்பவர்களுகேதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பார்களா? மது,சூது காரணமாக நாட்டில் எவ்வளவோ? அநியாயம் நடக்கிறது. அதை தடை செய்வதற்கு முயற்சி எடுப்பார்களா? நாட்டில் இனவாத காழ்ப்பு என்று தான் முடிவுக்கு வருமோ?
Reply : 0 0
HUMAN Tuesday, 30 August 2011 02:13 PM
இது இந்து மதத்திற்கு புறம்பானது. இதில் வர்த்தக நோக்கம்தான் அதிகம் . சந்தை வாய்ப்பு இருக்கிகிற இடத்தில் இதை செய்கிறாக்கள்
Reply : 0 0
xlntgson Tuesday, 30 August 2011 08:56 PM
ஆடுகளை மாடுகளை என்னதான் செய்ய வேண்டுமாம்? கட்டாக்காலியாக அலைய விட வேண்டுமா?
வியாபாரம் நோக்கம் என்றால் யாரும் இலவசமாக ஆடு மாடுகளை பராமரிப்பார்களா?
கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக்கென்றே ஓர் அமைச்சு இருக்கிறதே!
அதுவும் தர்மத்தில் தான் நடக்கிறதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago