2025 மே 26, திங்கட்கிழமை

சிறுபோக நெல்லினைக் கூட்டுறவு கடைகள் ஊடாக கொள்வனவு செய்ய நிதியொதுக்கீடு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோக நெல்லினைக் கூட்டுறவு கடைகள் ஊடாகக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை  சிறுபோக நெல்லினைக் கொள்வனவு செய்வதற்காக நெல் கொள்வனவு அதிகார சபைக்கு 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் வலய முகாமையாளர் பந்துல குமார தெரிவித்தார்.

மேலும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக அமைக்கப்படும் கட்டிடங்களில் பலவற்றை கண்காட்சி நிறைவு பெற்ற பின்னர் நெல் கழஞ்சிய சாலைகளாகப் உபயோகப்படுத்தவுள்ளதாக அநுராதபரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X