2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கேகாலையில் வாகன விபத்து: வெளிநாட்டவர் இருவர் உட்பட ஐவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரொஸான் குமார)

கேகாலை, கலிகமுவ பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். ஐவருக்கும் தலையில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த ஐவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் இருவர் ரஷ்ய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து கண்டிக்கு வெளிநாட்டு பிரஜைகள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களை ஏற்றிச்சென்ற வானுடன் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த கப் வாகனமொன்று நேரடியாக மோதியதிலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

வானில் பயணித்த ஐவருமே படுகாயமடைந்தவர்களாவர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X