Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க )
புத்தளம் நகர சபை, புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம், உலமா சபை ஆகியன புத்தளத்தில் அண்மையில் நடைப்பெற்ற அசம்பாவிதத்தினை வன்மையாக கண்டிப்பதாக இன்று புத்தளத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
புத்தளம் பெரியபள்ளி நிர்வாக சபைத்தலைவர் முஸம்மில், நகர சபை உறுப்பினர் முஜாஹித்துல்லா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் நகர சபை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'இந்த அசம்பாவிதச் செயலுக்கு காரணமாக இருந்தவர்களை புத்தளம் மக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர்களில் 99 வீதமானவர்கள் பாதாள குழுவினரும், அரச விரோத செயலில் ஈடுபடுபவர்களும் ஆவர்.
குறித்த சம்பவம் நடைப்பெற்ற இடத்துக்கு தான் பயணம் செய்தபோது தனது வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு பின்னயில் அரசுக்கு எதிரான சக்திகளே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை அசம்பாவிதத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தாருக்கு அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதி உயர் தண்டனை கிடைக்க புத்தளம் மக்கள் ஆதரவு வழங்குவார்களெனவும் குறிப்பிட்டார்.
நடைப்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பொலிஸாரிடமும் பெரும்பான்மை மக்களிடமும் புத்தளம் மக்கள் சார்பாக மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.
ROSHAN Wednesday, 31 August 2011 07:09 AM
கொலை செய்து விட்டு மன்னிப்பு கேட்காலமா? உங்கள் எல்லோரையும் செத்த போலீஸ்காரனின் குடும்பம் மன்னித்து விட்டதா? இருக்காத அப்படி என்றால் இந்தியா வில் துக்குக்கு ஆயத்தமாக இருக்கும் முருகன் .சாந்தன் .பேரறிவாளன் ஆகியோரும் மன்னிப்பு கேட்டால் ஒ.கே தானுங்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago