Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க, அப்துல்லா)
ரமழான் நோன்பு பெருநாளினை அடுத்து புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் கூடிய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்களது நோன்புப் பெருநாள் தொழுகையினை நடத்தி முடித்ததோடு- புத்தளத்தில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும்வகையில் கறுப்புக் கொடிகளை உயர்த்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன், மேற்படி அசம்பாவிதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புத்தளம் நகரில் பெருநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கொண்டாட்டகாலங்களை சமய அனுஷ்டானங்களுக்காக பயன்படுத்துமாறும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெருநாள் தொழுகை நிகழ்வில் புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
DILSHAD MUHAMMED Wednesday, 31 August 2011 04:00 PM
புத்தளம் ஜம்இய்யதுல் உலமாவுக்கு எமது நன்றிகள். முன்மாதிரி மிக்க உங்களது நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்ல முன்மாதிரியாக அமையட்டும். நடந்த கசப்பான சம்பவத்திற்கு எமதும் அனுதாபங்கள்....
Reply : 0 0
Abdul Aziz Thursday, 01 September 2011 01:23 AM
யா அல்லாஹ் தெரிந்தோ தெரியாமலோ நடந்த ஆசம்பவிதம்தான் இது. அதனால் எங்கள் அனைவரையும் மன்னித்து சிங்கலஇதமிழ்இமுஸ்லிம் மற்றும் அனைத்து சமுகத்தாரிடத்திம் ஒற்றுமையை ஏற்படுத்தி இந்த அழகான இலங்கைத் தீவில் வாழும் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் இருக்க யா அல்லா உனது அருளையும் அன்பையும் தொடர்ந்தும் பொழிவாயாக.ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்......alhamthu Lillahi Rabbil Aalameen!
Reply : 0 0
M.M.Rauff Thursday, 01 September 2011 03:54 AM
நல்ல திட்டம். இப்போதெல்லாம் நம்மை பற்றி பரவலாகவே தப்பெண்ணம் நிலவி வருகிறது. அதனை போக்க இது ஒரு முன் மாதிரியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதற்கு காரனமான யாவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.
Reply : 0 0
hibathullah farook Thursday, 01 September 2011 07:56 AM
நல்லதொரு செயற்பாடு மக்கள் அவசரத்தால் நடந்த இந்த தவரை உணர்ந்து இருப்பதை இட்டு அல்லா இவர்களின் நல்லெண்ண முயற்சியை போருந்திக்கொள்ளட்டும் இது நமது சமூகத்துக்கு ஒரு பாடம் .
Reply : 0 0
Rifai Thursday, 01 September 2011 06:58 PM
muslimgalai palivanga ninaiththa enavathihalukku nalla sattai. adi enavathaththil arasiyal saipavarhalai adaiyalam kanboam.
Reply : 0 0
nafris Friday, 02 September 2011 04:49 AM
முஸ்லிம்கள் யாருக்கும் எதிரி அல்ல ஆனால் முஸ்லிம்களை ஏன் எதிரியாக பார்க்கிறீர்கள் வேற்றுமை வேண்டாம் .....
Reply : 0 0
sharmee Tuesday, 06 September 2011 06:58 PM
பெருநாள் தொழுகை மைதானத்தில் நடந்தது .மத்த ஊர் உலமசபையும் பின்பற்றுங்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago