2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இயந்திரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

பொலன்னறுவை மாவட்டத்தின் கறுப்பளை முத்துக்கல் என்னும் இடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சண்முகம் சிவசம்பு (வயது 47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியானவர் ஆவார்.

சுனாமி இயந்திரமென அழைக்கப்படும் நெல்லையும் வைக்கோலையும் வேறுபடுத்தி தரும் இயந்திரத்தில் வைக்கோலை சீர்செய்து கொண்டிருந்தபோது களுத்தில் கட்டிய துணியானது இயந்திரத்தின் உட்பகுதியில் சிக்குண்டு குறித்த நபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார்.

சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X