2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அநூராதபுரத்தில் குளங்களிலுள்ள சேறுகளை அகற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                             

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள மத்தியதர மற்றும் நடுத்தர குளங்களிலுள்ள  சேறுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் மத்தியதர மற்றும் நடுத்தரங்களில் 2,500க்கும் மேற்பட்ட குளங்களுள்ளன. இவைகளில் 20 வீதமான குளங்களில் சேறுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட குளங்களில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X