2025 மே 26, திங்கட்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர)

சிலாபம் பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள  தேவாலயச் சந்திக்கு அருகில் யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன்,  இருவர் படுகாயமடைந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

டபிள்யூ. சிறிசேன (வயது 72) என்பவரே யானை தாக்கியதில் பலியானவர் ஆவார்.

காயமடைந்த இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதேவேளை, வனஜீவ இலாகா அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை மாலை ஜீப்பில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வத்துலுஓயா என்னும் பகுதியில் யானை தாக்கியதாகவும் இதன்போது ஜீப்பிற்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • Mubeen Monday, 12 September 2011 05:30 PM

    விதி அவ்வளவுதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X