2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அநுராதபுரதம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் எல்.பீ.விமலதாஸ தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மகிந்த செனவிரத்னவின் ஆலோசனையின் படியேஇத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்கின்றமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்துகின்றமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக உரிமையாளர்கள் கைது செய்யப்படவுள்ளனர் என  அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X