2025 மே 26, திங்கட்கிழமை

உடப்பு மீனவர்களுக்கு கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

உடப்பு தெற்கு மீனவர் சங்க உறுப்பினர்களுக்கான கருத்தரங்கொன்று இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது. கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மீன்பிடிக்கச் செல்லும்போது ஏற்படும் விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு  பெறுவதென்பது தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

கடற்றொழிலில் ஈடுபடும்  மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது அங்கு ஏற்படும் திடீர் விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக கரை திரும்புவது என்பது தொடர்பில் பல விளங்கங்களும் செயல்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் 25க்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X