2025 மே 26, திங்கட்கிழமை

மாராவிலயில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாராவில, மஹவெவ பிரதேசத்தில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து ராகமை போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் மாராவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோதல் இடம்பெற்ற இடத்திலிருந்து லொறி ஒன்றும் மூன்று முச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாராவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X