2025 மே 26, திங்கட்கிழமை

சீருடைத்துணி திருட்டுடன் தொடர்புடைய கடற்படை வீரருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

பூனேவ கடற்படை முகாமின் சீருடைத்துணி கள்களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  களஞ்சியசாலையிலி ருந்து ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சீருடைத்துணிகளையும் மற்றும் பொருட்களையும் திருடிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கடற்படை வீரரை  எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக  நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த உபுல் நிஸாந்த  சில்வா என்ற கடற்படை வீரராவார். களஞ்சியசாலையிலிருந்து சீருடைத்துணி திருடப்பட்டிருப்பது பற்றி மதவாச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X