2025 மே 26, திங்கட்கிழமை

சிறைச்சாலை அதிகாரிகளின் சீருடையை அணிந்தவாறு நடமாடிய யுவதி கைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட், எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் புதிய பஸ் நிலையப் பகுதியில் சிறைச்சாலை அதிகாரிகளின் சீருடையை அணிந்தவாறு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் யுவதியொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் யுவதியிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான் வெலிக்கடை சிறைச்சாலையில்  சேவையாற்றுவதாக கூறினார். இருப்பினும்  அவரிடம் எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாததால் சந்தேகமடைந்த பொலிஸார் வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரித்தபோது அவ்வாறான ஒருவர் அங்கு சேவையாற்றவில்லையென தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த விண்ணப்பப்படிவத்தின் சான்றுப்பத்திரமொன்றே   இருந்துள்ளது. இதன்படி குறித்த யுவதி றக்வான பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஒரு மனநோயாளியாக இருக்குமோவென சந்தேகிப்பதால் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X