Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பெண்ணொருவரை நிர்வாணமாகப் வீடியோவில் பதிவு செய்து அப்பெண்ணை அச்சுறுத்தி 50000 ரூபா கப்பம் கோரிய நபரை கொட்டாவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிரி அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டதற்கமைவாக பொலிஸார் இந்நபரை கைதுசெய்துள்ளனர்.
அநுராதபுரம் தம்மென்னா குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
கப்பம் கேட்டு அச்சுறுத்திய நபர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வர்ணப்பூச்சிகள் பூசுவதற்காக சென்றபோது அப்பெண்ணின் நிர்வாணப் படங்களை எடுத்து கப்பம் கேட்பதாகவும் இதனால் வீட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் அப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்தபோது கொண்டுவந்த ஆயுதங்கள் இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி தன்னை அச்சுறுத்தவதாகவும் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைவாக மேற்படி நபரை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.என். ரத்னாயக்காவின் ஆலோசனைப்படி பொலிஸ் அதிகாரி கல்தேரா நீதிமன்றில் விளக்கங்களை முன்வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
49 minute ago
2 hours ago