2025 மே 26, திங்கட்கிழமை

பஸ் மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

முந்தல் பொலிஸில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், பஸ் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். திலக் வீரசிங்க என்ற பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆரச்சிகட்டுவ, பண்டாரவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இவர் தனது சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வவுனியாவிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் முந்தல், 61ஆவது சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X