2025 மே 26, திங்கட்கிழமை

குருநாகல் வாகன விபத்தில் இருவர் பலி; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)  

குருநாகல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹஜ் கடமைக்காக தனது மகளை வழியனுப்பி விட்டு  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் நிந்தவூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இவர்களின் கார்,  கனரக லொறியொன்றுடன் மோதி  விபத்திற்குள்ளானது.

காரில் பயணித்த தாயும் மகனுமே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவார்.  மகளும் பேரனும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நிந்தவூர் அல்-மஷ்கர் பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எம்யூ.எச்.சித்தீக்கும் ஒருவராவார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X