2025 ஜூலை 16, புதன்கிழமை

துப்பாக்கியால் சுடப்பட்ட, பார்வையிழந்த யானையே வாகனங்களை தாக்கியது

Super User   / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காஞ்சனகுமார ஆரியதாஸ)

அநுராதபுரம் கெக்கிராவை நகருக்குள் நேற்று சனிக்கிழமை புகுந்து சுமார் 50 வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய யானை பல வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு  பார்வை பாதிக்கப்பட்ட யானை என வடமத்திய மாகாண வனஜீவராசிகள் அலுவலகத்தைச் சேர்ந்த மிருக வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த யானையின் உடலில் பல இடங்கள் காயங்கள் காணப்படுகின்றன. அதன் ஒரு கண் பார்வையிழந்துள்ளதாகவும் மற்றொரு கண் பகுதியளவு பார்வை குறைபாடு கொண்டதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

கண்பார்வையிழந்த இந்த யானை தனது வழியில் உள்ள அனைத்து பொருட்களையும் தாக்குவதாகவும் மரங்கள் அகப்பட்டால் மரங்கைளயும் தாக்குவதாகவும் அவர் கூறினார்.

இந்த யானையை பிடித்து சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். (Pix by Akil Ahmed)

தொடர்புடைய செய்திகள்:

நகருக்குள் புகுந்த காட்டு யானையால் 50 வாகனங்கள் சேதம்

வீதிக்கு வந்த காட்டு யானை அட்டகாசம்


You May Also Like

  Comments - 0

  • riswan Sunday, 30 October 2011 08:51 PM

    மனிதர்களே! மற்ற உயிர்களையும் நேசியுங்கள்.

    Reply : 0       0

    meenavan Sunday, 30 October 2011 10:18 PM

    களனி மே.....வின் இந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதில் உதவுவாரா? அரசியல் எதிரிகளின் சின்னம் என்பதால் தண்டனை வழங்குவாரோ?

    Reply : 0       0

    Irfan Monday, 31 October 2011 02:22 AM

    pali vaangum unarval varum, pin vilaivai oru mirugam emakku eduththuk kaaddiullathu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X