2025 மே 26, திங்கட்கிழமை

கெக்கிராவையில் பஸ் குடைசாய்ந்ததில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(பிரியந்த ஹேவகே, ஆகில் அஹமட்)

ஏ - 9 வீதி, கெக்கிராவ நகரை அண்மித்த பகு தியில் இன்று திங்கட்கிழமை பஸ்வண்டியொன்று  பாதையை விட்டு விலகி வயல்வெளியில் குடைசாய்ந்ததால் ஐந்து பயணிகள் படுகாயமடைந்ததுடன்  மேலும் பலர் சிறுகாயங்களுக்குட்பட்டதாக கெக்கிராவ பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்னாயக்க தெரிவித்தார்.

கெக்கிராவ டிப்போவுக்கு சொந்தமான இந்த பஸ்வண்டி கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்  போது சார தியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி இப்பகுதியில் இருந்த  வயல் வெளியில் குடைசாய்ந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய பஸ் வண்டிச்சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து பிரிவு  பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X