2025 மே 26, திங்கட்கிழமை

கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகத் கருதப்படும் கைத்துப்பாக்கியொன்றை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பண்டுலகம பகுதியில் நேற்று புதன்கிழமை குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டதாக  அநுராதபுரம் பொலிஸ் நிலைய பல்முறைப்பாடுகள் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.என்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தனது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக பொலிஸ் நிலையம் வரை சென்ற பின்னரே குறித்த இளைஞரிடம் சட்டவிரோத கைத்துப்பாக்கி இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஆர்.எம்.என்.ரத்நாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X