2025 ஜூலை 16, புதன்கிழமை

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

Kogilavani   / 2011 நவம்பர் 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்,எம்.சீ.சபூர்தீன்)

பல்வேறு  கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   காமினி ஜயசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் கட்டுக்கலியாவ, நீராவியடி பகுதிகளை சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய இரு மோட்டார் சைக்கில்களும் கைப்பற்றப்பட்டதுடன் இவர்களால் கொள்ளையிட்டதாக நம்பப்படும் 5  லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், சுமார் ஒரு  லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள், 22000  ரூபா ரொக்கப் பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நபர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X