2025 மே 26, திங்கட்கிழமை

தனிமையில் இருந்த ஆசிரியை கழுத்து நெரித்து கொலை; மதவாச்சியில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 05 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்கம கிராமத்தில் வீடொன்றில் தனிமையில்
வசித்து வந்த ஆசிரியை ஒருவர் கழுத்து நெரித்து கொலை
செய்யப்பட்டுள்ளார் என்று மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான
பொலிஸ் பரிசோதகர் பீ.எம்.திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பவர் பீ.பீ.எம்.பெரேரா விஜேரத்ன
(வயது 78) என்ற ஆங்கில ஆசிரியையாவார். திருமணமாகாத இவர் தனியாக அவரது வீட்டில் நீண்டகாலமாக வசித்து வந்துள்ள நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நீதவான் சந்திம எதிரிமான்ன அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின்
சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரத்னவிடம் பிரேத பரிசோதனை
மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கொலை தொடர்பான விசாரணைகளை
மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X