Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 06 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் நகரிலுள்ள தொழில்நுட்ப நிறுவனமொன்றினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு அந்நிறுவனத்தில் வைக்கப்பட்ட ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 8 மின்சார மோட்டர்களை திருடியதாகத் தெரிவிக்கப்படும் 3 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தொலைபேசி அழைப்பையடுத்தே, குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய அவசர அழைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் மூவரையும் கைதுசெய்ய முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட மோட்டர்களை கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில் அப்பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், விசாரணை செய்து மேற்படி சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
9 hours ago