Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 09 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, ஹிஜாஸ்)
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் புத்தளம் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய ஹஜ் தேசிய பெருவிழா இன்று புதன்கிழமை புத்தளம் ஐ.பி.எம். மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.நபீலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் முஹம்மது ஹசீன், புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், உள்ளிட்ட மும்மதத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசிய ஒருமைப்பாட்டை பிரதிபளிக்கும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்களினால் தேசப்பற்றுப் பாடல்களும், நடனங்களும், நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago
9 hours ago