2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் டிப்போவில் பொருட்கள் திருடிய நபருக்கு விளக்கமறியல்

Super User   / 2011 நவம்பர் 19 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அநுராதபுரம் டிப்போவிலிருந்த பெறுமதிமிக்க ஒரு தொகை பொருட்களை திருடிய சந்தேகநபரை நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டார்.

மான்கடவள பகுதியைச் சேர்ந்த அநுராதபுரம் டிப்போவில் கடமை புரியும் ஊழியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் டிப்போவிலிருந்த பெறுமதிமிக்க உபகரணங்களை திருடி விற்பனை நிலையமொன்றுக்கு விற்பனை செய்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.என்.ஆர்.வீரசூரியவின் ஆலோசனைப்படி  பொலிஸ் அதிகாரிகளான அபேசிங்க மற்றும் நீல் ஆகியோர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X