2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நீதிபதிக்கு இடையூறு ஏற்படுத்தியவருக்கு இரு மாத சிறை, அபராதம்

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உபாலி ஆனந்த)

திஸ்ஸவெவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிற்கூடாக செல்லும் வீதியில் காரில் பயணித்துக்கொண்டிருந்த மேல்நீதிமன்ற நீதிபதியொருவருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு இருமாத சிறைத்தண்டனையும் 23,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏஅஷித குமார எனும் இந்நபருக்கு அநுராதபுரம் பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான தர்ஷிகா விமலசிறி இத்தண்டனையை விதித்தார்.

இந்நபரைஅநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி  இன்ஸ்பெக்டர் விஜேசுந்தர நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.
சந்தேக நபர் மேற்படி  சம்பவம் இடம்பெற்ற வேளையில் மோட்டார் சைக்கிளுக்கு செல்லுபடியான அனுமதிப் பத்திரத்தையே, காப்புறுதி பத்திரத்தையோ, வாகன வருமான உத்தரவு பத்திரத்தையோ வைத்திருக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X