2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குளத்தில் நிர்வாண நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கால திவுல்வௌ, நாவற்குளம் பகுதி வாய்க்கால் ஒன்றுக்கருகிலிருந்து இன்று புதன்கிழமை இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என  நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். 

காலதிவுல்வௌ பகுதியைச் சேர்ந்த இவ்விளைஞர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றில் நொச்சியாகம நகருக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களே இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நாவற்குளம் பகுதியில் இளைஞர்கள் இருவரது சடலங்கள் இருப்பதைக்கண்ட பிரதேசவாசிகள் உடன் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதும் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை கண்டெடுத்துள்ளனர். 

இவர்கள் எடுத்துச்சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் என்பன சடலங்கள் இருந்த பகுதியில் காணப்படவில்லை என்பதுடன் சடலங்கள் இரண்டும் நிர்வாணமாகவே இருந்துள்ளன.

இந்த இரு சடலங்களும் காலதிவுல்வௌ பகுதியைச் சேர்ந்த சுரவீர ரத்னாயக்க (வயது 18), நிலங்க ரத்னாயக்க (வயது 21) ஆகியோருடையது என பிரதேசவாசிகள் அடையாளம் காட்டியுள்ளனர் எனவும் நொச்சியாகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X