Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் எம்.சீ.கெக்கிரிதெனிய உத்தரவிட்டார்.
நாவற்குளம், காளிவுல்வௌ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்பொழுது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் என நொச்சியாகம பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் சார்ஜன்ட் சந்திரசேன நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago