2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிப்புரத்தில் புதிய மருத்துவ நிலையம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 01 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், முள்ளிப்புரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ நிலையம் நேற்று சனிக்கிழமை மாலை புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ நிலையம் துருக்கி நாட்டின் ஐ.எச்.எச். நிறுவனத்தின் அனுசரணையுடன் புத்தளம் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டது. இக்கட்டிட நிர்மாணிப்புக்காக ஐ.எச்.எச். நிறுவனத்தினால் 25 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்ட அதேவேளை,  புத்தளம் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் 7 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.

புத்தளம் ஜமாத் இஸ்லாம் பொறுப்பாளர் மௌலவி மின்ஹாஜின் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ஐ.எச்.எச். நிறுவன பணிப்பாளர் முஹம்மது ஹனபி உதுலுகுலு, உயரதிகாரிகள் குழுவினர், அகில இலங்கை ஜமாத் இஸ்லாம் செயலாளர் டாக்டர் மஹேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • nalla pani walha Tuesday, 03 January 2012 03:38 AM

    ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமி இந்த நாட்டிற்கு நல்ல பல பணிகளை செய்து வரும் ஒரு அமைப்பு.

    Reply : 0       0

    kamil Azad Friday, 20 January 2012 09:44 PM

    காலத்தின் தேவை கருதி ஜமாதுல் இஸ்லாமி செய்யும் இந்த வேலைகள் சிறப்பானவை. அறிவும் ஆரோக்கியமும் உள்ள சமூகம்தான் உலக மறுமை பணிகளில் ஒத்துழைக்க முடியும். இந்த நாட்டில் கல்வித்துறை சார்ந்த பணிகளையும் இந்த அமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X