Menaka Mookandi / 2012 ஜனவரி 04 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர, ஹிஜாஸ்)
புத்தளம் - கொழும்பு பிரதான வீதி, மதுரங்குளி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் விமானப்படையைச் சேர்ந்த சார்ஜன் விமானியொருவர் உயிரிழந்தார்.
புத்தளத்திலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கி வந்துகொண்டிருந்த ஆடைத்தொழிற்சாலையை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி விமானப்படை அதிகாரியே உயிரிழந்தவராவார். பதுளுஓயாவைச் சேர்ந்த கே.ஜீ.வீரசிங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் புத்தளம் விமானப்படை முகாமில் கடமையாற்றி வருபவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. முந்தல் பொலிஸார் பஸ் சாரதியை கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago