2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையிலிருந்து திரும்பிய அதிபரின் தலைக்கவசத்திற்குள் நச்சுப் பாம்பு

Super User   / 2012 ஜனவரி 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய அதிபரின் தலைக்கவசத்திற்குள்  நச்சுப் பாம்பொன்று காணப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹுலுகல்ல கவிசேன ஹேரத் வித்தியாலய அதிபருக்கே இந்த திகில் அனுபவம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அதிபர் தலைக்கவசத்தை கழற்றும் போது அதற்குள் நச்சுப்பாம்பொன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பெரும் எண்ணிக்கையிலான பிரதேசவாசிகள் அங்கு திரண்டனர். பின்னர் மேற்படி அதிபர் நிக்கவரெட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பாடசாலையிலிருந்து திரும்பும்போது அவசரத்தில் தலைக்கவசத்தை சோதிக்காமல் அதை தான் அணிந்துகொண்டதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும் அப்பாம்பு அதிபரை கடிக்கவில்லை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து விடுவித்தனர். (DM)

 


You May Also Like

  Comments - 0

  • Riznia Saturday, 07 January 2012 04:19 AM

    இச்சம்பவத்தின் மூலம் நாம் பாடம் கற்க வேண்டும்.

    Reply : 0       0

    kolifathaanaa Saturday, 07 January 2012 04:27 PM

    அதிபர் தலையில் இருந்து பாம்பு கேட்டது , மாணவரகள் சவ்கியமா ?..............

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Sunday, 08 January 2012 06:48 AM

    இது பரமசிவனின் திருவிளையாடல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X