2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் பாத்திமா மகா வித்தியாலயத்தின் பொன் விழா கட்டுரைப் போட்டிகள்

Kogilavani   / 2012 ஜனவரி 06 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் பாத்திமா மகளிர் மஹா வித்தியாலம் தனது பொன்விழாவினை முன்னிட்டு திறந்த மட்டத்தில் கட்டுரை, கவிதை, சித்திரப் போட்டிகளை நடாத்தவுள்ளது. போட்டிகளில் பங்குப்பற்ற விரும்புபவர்கள் தங்களது ஆக்கங்களினை ஜனவரி மாதம் 25ம் திகதிக்கு முன் பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கல்லூரி பொன் விழா நிர்வாக குழுவினால் கோரப்பட்டுள்ளது.

போட்டி விபரங்கள்

1.    கட்டுரைத் தலைப்பு பெண்களின் கல்வி அபிவிருத்தியில் புத்தளம் பாத்திமா கல்லூரியின் பங்களிப்பு ( 1500 – 2000 சொற்கள்) 

2.    கவிதைத் தலைப்பு பெண்களின் முன்னோடி புத்தளம் பாத்திமா கல்லூரி (50 வரிகள்) 

3.    சித்திரம்  சவால்களினை சமாளிக்கும் பாத்திமாவின் சாதனைகள் எனும் கருப்பொருளில் வரைய வேண்டும்.

ஆக்கங்கள் யாவும் கையெழுத்து பிரதியாகவும், ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதப்பட்டதாகவும், சொந்த ஆக்கமாகவும் இருக்க வேண்டும்.

புத்தளம் பாத்திமா கல்லூரி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி தனது பொன்விழாவினை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X