Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 14 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
வடமேல் மாகாண கடற்றொழில், வீடமைப்பு, மின்சக்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி சிலாபம் முகுனுவட்டவான் மதாரா மலர் வளர்ப்புச்சங்கம் சுழற்சி முறையிலான நிதியம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
இந்த நிதியத்தின் ஊடாக தமது சங்க உறுப்பினர்களுக்கு மலர்ச்செடி வளர்ப்பதற்குத் தேவையான ஒளி மறைப்பு வலைகள் மற்றும் மலர்களைக் கொண்டு செல்ல பயன்படும் கூடைகளையும் வழங்கியுள்ளது.
இந்நடவடிக்கை சிலாபம் பம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள மதாரா இல்லத்தில் இடம்பெற்ற போது வடமேல் மாகாண அரமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மதாரா மலர் வளர்ப்புச் சங்க உறுப்பினர்களுக்கு ஒளி மறைப்பு வலைகள் மற்றும் கூடைகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவும் கலந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago