2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதியதில் பெண் பலி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 14 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற பெண்னொருவர் ரயிலில் மோதி மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நீர்கொழும்பு – கச்சேரி அருகில் உள்ள ரயில் குறுக்கு பாதையில் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் சீதுவை - ராஜபக்ஷபுர பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பிரேமவதி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சுத்திகரிப்பு ஊழியராக பணிபுரிபவராவார்.

வேலை முடிந்து வீடு செல்லும் போது ரயில் பாதையின் அருகில் உள்ள கம்பியில் அவரது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதன் போது ரயில் வரவே அதில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .